உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பேருந்து மோதியதில் மாநகராட்சி ஊழியர் பலி

பேருந்து மோதியதில் மாநகராட்சி ஊழியர் பலி

காஞ்சிபுரம்:வாலாஜாபாத் அடுத்த, கொளத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல், 40. இவர், காஞ்சிபுரம் மாநகராட்சியில் துப்புரவு சூப்பர்வைசராக பணியாற்றி வந்தார்.இந்நிலையில், காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில், செவிலிமேடு அருகே, நேற்று முன்தினம், இரவு 8:25 மணியளவில், 'ஹீரோ ஹோண்டா பேஷன் ப்ரோ' இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, காஞ்சிபுரத்திலிருந்து மதுராந்தகம் நோக்கி சென்ற தனியார் பேருந்து, சக்திவேல் சென்ற இருசக்கர வாகனம் மீது மோதி உள்ளது. இதில், படுகாயமடைந்த அவர், தீவிர சிகிச்சைக்காக, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்தார்.இதுகுறித்து, காஞ்சி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ