உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / திருமுக்கூடல் கிளை நுாலகத்திற்கு ரூ.22 லட்சத்தில் புதிய கட்டடம்

திருமுக்கூடல் கிளை நுாலகத்திற்கு ரூ.22 லட்சத்தில் புதிய கட்டடம்

உத்திரமேரூர் : உத்திரமேரூர் ஒன்றியம், திருமுக்கூடல் கிராமத்தில் கிளை நுாலகம் உள்ளது. திருமுக்கூடல்,புல்லம்பாக்கம், மதூர், அருங்குன்றம் உள்ளிட்ட கிராம வாசகர்கள் இந்த நுாலகத்தில் உறுப்பினராக உள்ளனர்.மேலும், சுற்றுவட்டார கிராம கல்லுாரி மாணவர்கள், திருமுக்கூடல் உயர்நிலைப் பள்ளி மாணவ - மாணவியர், இந்த நுாலகத்திற்கு வந்து கல்வி சம்பந்தமான புத்தகங்கள் பெற்றுச் செல்கின்றனர்.இந்நிலையில், திருமுக்கூடல் கிளை நூலக கட்டடம், சில ஆண்டுகளாக மிகவும் பழுதடைந்து மழை நேரங்களில் தளத்தின் வழியாக நீர் சொட்டி வருகிறது. இதனால், அச்சமயங்களில் நூலகத்தில் உள்ள புத்தகங்களை பாதுகாப்பதில் சிக்கல் இருந்து வருகிறது.எனவே, இந்த நுாலகத்திற்கு புதிய கட்டட வசதி ஏற்படுத்த வேண்டும் என பல தரப்பினரும் கோரி வந்தனர்.இதுகுறித்து, அவ்வப்போது நம் நாளிதழில் செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில், திருமுக்கூடல் கிளை நூலகத்திற்கு புதிய கட்டடம் கட்ட 22 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.தற்போது அதற்கான பணிகள் துவங்கி நடைபெறுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி