உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / உலக புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு

உலக புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு

காஞ்சிபுரம், உலக புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி, காஞ்சிபுரம் உப்பேரி குளம், நகர்புற நலவாழ்வு மையத்தில், விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.இதில், இம்மையத்தின் டாக்டர் விஜயகுமார், புகையிலை பயன்படுத்துவதாலும், புகை பிடிப்பதால் ஏற்படும் தீமை குறித்து பேசினார்.இதேபோல, சின்ன காஞ்சிபுரம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர் நிறைமதி, டாக்டர் சந்தியா, நத்தப்பேட்டை நகர்புற நலவாழ்வு மையத்தில் டாக்டர் ரவிராஜன், மஹாலிங்கம் நகர் மையத்தில் டாக்டர் காமாட்சி ஆகியோர் புகையிலால் ஏற்படும் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.உத்திரமேரூர்:காஞ்சிபுரம் மாவட்ட புகையிலை கட்டுப்பாடு மையம், ஹேண்ட் இன் ஹேண்ட் நிறுவனம் மற்றும் காஞ்சிபுரம் பல் மருத்துவ சங்கம் சார்பில், உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.உத்திரமேரூர் அடுத்த ரெட்டைமங்கலம் கிராமத்தில் உள்ள மகளிர் சுய உதவிகுழுவினருக்கு, புகையிலை எதிர்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், புகையிலை எதிர்ப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ