மேலும் செய்திகள்
குன்றத்தில் சிவராத்திரி விழா
03-Mar-2025
காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் கருக்கினில் அமர்ந்தவள் அம்மன் கோவில் தெருவில், திரிலோகநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில், திருவண்ணாமலை கிரிவலக் குழு சார்பில், மாசி மகத்தையொட்டி நேற்று முன்தினம் மாலை, நடராஜ பெருமானுக்கும், சிவகாமி அம்பிகைக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம், மஹா தீபாராதனை நடந்தது.தொடர்ந்து சிறப்பு நிகழ்வாக சிவகாமி அம்பிகைக்கு, புதியதாக செய்யப்பட்ட திருமாங்கல்யம் அணிவித்தல் நிகழ்வு நடந்தது. இதில், திரளான கிரிவலக் குழுவினர் பங்கேற்றனர்.
03-Mar-2025