உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கூட்டுறவு பயிற்சியில் சேர ஆன்லைனில் விண்ணப்பம்

கூட்டுறவு பயிற்சியில் சேர ஆன்லைனில் விண்ணப்பம்

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையம் இயங்கி வருகிறது. இங்கு, 2024- -- 25ம் ஆண்டுக்கான ஓராண்டு முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி துவக்கப்பட உள்ளன.இந்த பயிற்சியில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் இன்று முதல் ஜூலை- 19ம் தேதி, மாலை 5:00 மணி வரையில், www.tncu.tn.gov.inஇணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம்.இணைய வழி மூலமாக, விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். விண்ணப்ப கட்டணமாக, 100 ரூபாய் இணைய வழி மூலமாக செலுத்த வேண்டும்.பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, சுய கையெழுத்திட்டு அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையம், எண்: 5ஏ. வந்தவாசி சாலை, காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாகம் மற்றும் பதிவு அஞ்சலில் சமர்ப்பிக்க வேண்டும்.தேர்வு செய்யப்பட்ட பயிற்சியாளர்கள், பயிற்சிக்கான கட்டணமாக, 18,750 ரூபாய் இணைய வழி செலுத்த வேண்டும் என, கூட்டுறவு மண்டல இணைப் பதிவாளர் ஜெயஸ்ரீ தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ