ஸ்டார்ட் ஆகாத புது பைக ் ரூ.20,000 இழப்பீடு வழங்க உத்தரவு
சென்னை : சென்னை, கீழ்க்கட்டளையைச் சேர்ந்த சுரேஷ்பாபு என்பவர் சென்னை தெற்கு நுகர்வோர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:கீழ்க்கட்டளையில் 'மகாலட்சுமி மோட்டார்ஸ்' என்ற நிறுவனம் உள்ளது. இங்கு, 2019 செப்., 19ம் தேதி, 61,968 ரூபாயில் டி.வி.எஸ். ஸ்போர்ட் ஈ.எஸ் பிளாக் சில்வர் என்ற மாடல் பைக் வாங்கினேன்.எனக்கு 2ே3ம் தேதி வழங்கினர். இரண்டு நாளுக்கு பின், 25ம் தேதி வாகனத்தை இயக்க முயற்சித்தும், 'ஸ்டார்ட்' ஆகவில்லை. பலமுறை பிரச்னை எதிர்கொண்டேன். ஒவ்வொரு முறையும் பழுதுக்கு புது புது காரணங்களை தெரிவித்தனர். எனவே, மன உளைச்சல் ஏற்படுத்தியதற்கு 3 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த மனுவை, சென்னை தெற்கு மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற தலைவர் பி.ஜிஜா, உறுப்பினர்கள் டி.ஆர்.சிவகுமார், எஸ். நந்தகோபாலன் அடங்கிய அமர்வு விசாரித்தது. பின் அமர்வு பிறப்பித்த உத்தரவு:உரிய நடைமுறைகள்படி வாகனம் இயக்கப்படவில்லை என்ற வாதம் ஏற்புடையதல்ல. ஏனெனில் வாகனத்தை வாங்கியது முதல் பல பிரச்னைகளை புகார்தாரர் எதிர்கொண்டு உள்ளார். எனவே, சேவை குறைபாடுடன் செயல்பட்டதால் வாகனத்துக்கான தொகை 61,968 ரூபாயை, 9 சதவீத வட்டியுடனும், மன உளைச்சல் ஏற்படுத்தியதற்கு 20,000 ரூபாயும், வழக்கு செலவாக 5,000 ரூபாயும், மனுதாரருக்கு டி.வி.எஸ்.மோட்டார் நிறுவனம், மகாலட்சுமி மோட்டார்ஸ் வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.