மேலும் செய்திகள்
கொள்முதல் நிலையத்தில் 7,000 நெல் மூட்டைகள் தேக்கம்
5 hour(s) ago
அலுவலக உதவியாளர் பணி 5 பேருக்கு 734 பேர் போட்டி
6 hour(s) ago
இன்று இனிதாக .... (11.10.2025) காஞ்சிபுரம்
9 hour(s) ago
பூந்தமல்லி : பூந்தமல்லி அடுத்த கரையான்சாவடி பகுதியைச் சேர்ந்தவர் துரைமுருகன், 37. இவர், இருங்காட்டுக்கோட்டையில் உள்ள கார் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஒப்பந்த தொழிலாளராக பணியாற்றி வந்தார்.கடந்த 20ம் தேதி தொழிற்சாலையின் 2வது மாடியில் இருந்து கால் இடறி கீழே விழுந்ததில், துரைமுருகன் படுகாயம் அடைந்தார்.போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர், நேற்று முன்தினம் முளைச்சாவு அடைந்தார். இதையடுத்து, இவரது உடல் உறுப்புக்களை அவரது குடும்பத்தினர் தானம் அளித்தனர்.தகவலறிந்து, அரசு சார்பில் திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் கற்பகம் நேற்று, கரையான்சாவடிக்கு சென்று, துரைமுருகன் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பூந்தமல்லி வட்டாட்சியர் கோவிந்தராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.
5 hour(s) ago
6 hour(s) ago
9 hour(s) ago