உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஓரிக்கை ---- செவிலிமேடு 4 வழி பாதையை மாற்று பாதையில் செயல்படுத்த மனு

ஓரிக்கை ---- செவிலிமேடு 4 வழி பாதையை மாற்று பாதையில் செயல்படுத்த மனு

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் கலெக்டர்வளாக கூட்டரங்கில், கலெக்டர் கலைச்செல்வி தலைமையில், மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. இதில், ஓரிக்கை- - செவிலிமேடு, நான்கு வழிப் பாதையை மாற்றுப்பாதையில் செயல்படுத்த வேண்டும் என்று, ஓரிக்கை பகுதிவாசிகள் மனு அளித்தனர்.மனு விபரம்: ஓரிக்கை- - செவிலிமேடு வரையிலான சாலை விரிவாக்கத் திட்டத்துக்காக ஏற்கனவே நிலம் எடுக்கப்பட்டது. நிலத்துக்கு, 1 சதுர அடிக்கு 410 ரூபாய் மட்டுமே பணம் வழங்கப்பட்டது.ஆட்சேபனை தெரிவித்து மனு அளித் தோம். மறு இழப்பீடு தொடர்பாக நீதி மன்றத்துக்கு அனுப்பி விடுவோம். அங்கு நீங்கள் முறையிட்டு மறு இழப்பீடு பெறலாம் என்று, அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில் ஓரிக்கை பகுதியில் நான்குவழிச் சாலை அமைக்கவும், பாலம் அமைக்கவும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாகவும், செயல்பாட்டுக்கு வரும் என செய்திகள் வருகின்றன.ஏற்கனவே துவங்கிய பணிகளே முடிக்காத நிலையில், உடனடியாக மீண்டும் சாலை விரிவாக்கம் என்பது எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் மாற்றுப் பாதையில் இந்தத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி