உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / குளத்தில் மூழ்கி பெயின்டர் பலி

குளத்தில் மூழ்கி பெயின்டர் பலி

சேலையூர், சேலையூர் அடுத்த கவுரிவாக்கத்தைச் சேர்ந்தவர் கோதண்டபாணி, 35; பெயின்டர். நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள கங்கை அம்மன் கோவில் குளத்தில் குளித்தபோது, தண்ணீரில் மூழ்கினார். அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் இதை கவனித்து, கோதண்டபாணியின் உறவினர் களிடம் கூறினர்.அவர்கள்போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேடவாக்கம் தீயணைப்பு துறையினர் விரைந்து, கோதண்டபாணியின் உடலை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.விசாரணையில், அவர் மதுபோதையில் குளித்தது தெரியவந்தது. சேலையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை