மேலும் செய்திகள்
கோலமாவு வியாபாரி சாலை விபத்தில் பலி
02-Feb-2025
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் அடுத்த, மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல், 50. நேற்று முன் தினம், இரவு 7:30 மணி அளவில், குண்டு குளத்தில் இருந்து, கீழ்கதிர்பூர் நோக்கி நடந்து சென்றுக் கொண்டிருந்தார்.அப்போது, அதே வழித்தடத்தில் சென்ற அடையாளம் தெரியாத வாகனம், அவர் மீது மோதியதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பாலுச்செட்டிசத்திரம் போலீசார், சக்திவேல் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.
02-Feb-2025