உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / இருக்கை வசதியின்றி ஆதார் மையம் ஸ்ரீபெரும்புதுாரில் மக்கள் அவதி

இருக்கை வசதியின்றி ஆதார் மையம் ஸ்ரீபெரும்புதுாரில் மக்கள் அவதி

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில், அரசு ஆதார் சேவை மையம் செயல்பட்டு வருகிறது. ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்திற்கு உட்பட்ட 58 ஊராட்சிகளைச் சேர்ந்த பகுதிவாசிகள் ஏராளமானோர் தினசரி இங்கு வந்து செல்கின்றனர்.ஆதார் அட்டையில் திருத்தம் மற்றும் புதிய பதிவு மேற்கொள்ள, குழந்தைகள், பெண்கள், முதியோர் உட்பட நாள்தோறும் 1,000க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.ஆதார் மைய அலுவலகத்தில் போதிய இடவசதி இருந்தும், குழந்தைகள், முதியவர்கள் என, பொதுமக்கள் காத்திருக்க போதிய இருக்கை வசதி இல்லை. இதனால், இந்த சேவை மையத்தின் வாசலில் காத்திருக்க நேரிடுகிறது.இது தவிர, இதற்கான விண்ணப்பங்கள் பூர்த்தி செய்ய நுழைவாயில் பகுதியில் மரத்தடியில் உள்ள எழுத்தர்களிடமும் வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது.ஆதார் சேவை மையத்தில் இருக்கை மற்றும் விண்ணப்பங்கள் நிரப்ப, மேசை வசதியுடன், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை