உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மக்கள் குறைதீர் கூட்டம்; 313 பேர் மனு ஏற்பு

மக்கள் குறைதீர் கூட்டம்; 313 பேர் மனு ஏற்பு

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் வளாக கூட்டரங்கில், வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம், கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் நேற்று நடந்தது.இதில், பட்டா, ஆக்கிரமிப்பு, வேலைவாய்ப்பு, உதவித்தொகை, ரேஷன் கார்டு உள்ளிட்ட பல்வேறு வகையிலான கோரிக்கை மனுக்களை, 313 பேர் அளித்தனர். மனுக்களை பெற்ற கலெக்டர் கலைச்செல்வி, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.இக்கூட்டத்தில், குன்றத்துாரைச் சேர்ந்த சஞ்சய்குமார் என்பவருக்கு, தொழில்நுட்ப கல்வி உதவித்தொகையாக, 50,000 ரூபாய்க்கான காசோலையை, கலெக்டர் கலைச்செல்வி வழங்கினார்.இக்கூட்டத்தில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் சத்யா உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை