உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / உடற்கல்வி இயக்குனர்கள் கவுரவிப்பு

உடற்கல்வி இயக்குனர்கள் கவுரவிப்பு

சென்னை: விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கிய, பல்வேறு பல்கலைகளில் பணியாற்றும், 10 உடற்கல்வி இயக்குனர்கள், ஜேப்பியார் பல்கலை சார்பில் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.ஜேப்பியார் பல்கலையின் உடற்கல்வியியல் துறை சார்பில், கல்வி மற்றும் விளையாட்டுத்துறையில் சிறப்பாக செயல்படும், உடற்கல்வி இயக்குனர்களுக்கு விருது வழக்கும் விழா, செம்மஞ்சேரியில் உள்ள பல்கலை வளாகத்தில் நடந்தது.விழாவில், பல்கலையின் நிறுவன வேந்தர் ரெஜினா முரளி தலைமை வகித்து, வாழ்நாள் சாதனையாளர் விருதை, குருநானக் கல்லுாரியில் ஓய்வு பெற்ற உடற்கல்வி இயக்குனர் வாசுதேவனுக்கு வழங்கினார்.அதன்படி, 'ஜேப்பியார் லெஜண்டரி' விருது ஜெயின் பல்கலையின் ஷங்கர் யுவி, மகாத்மா காந்தி பல்கலையின் பினு ஜார்ஜ் வர்க்கிஸ், கோழிக்கோடு பல்கலையின் சாகீர் ஹூசைன், டி.பி., ஜெயின் பல்கலையின் தேசிங்குராஜன், விவேகானந்தா கல்லுாரியின் கொண்டல்ரெட்டி, ஆந்திர பல்கலையின் விஜய் மோகன் நர்வனேனி, எஸ்.ஆர்.எம்., கல்லுாரியின் பேராசிரியர் ஜீசஸ் ராஜ்குமார் ஆகியோருக்கு வழங்கப்பட்டன.'பியூச்சர் ஆப் இந்தியா ஸ்போர்ட்ஸ்' விருது, கிரசண்ட் பல்கலையின் செல்வகுமார், அமிட் பல்கலையின் ராம்குமார் ஆகியோருக்கு வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை