| ADDED : ஜூலை 16, 2024 12:53 AM
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாநகராட்சி, 30வது வார்டு யாகசாலை தெருவில், மாநகராட்சி கணினி வரி வசூல் மையம் இயங்கி வருகிறது. இங்கு சின்ன காஞ்சிபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்தவர்கள், மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குழாய் வரி உள்ளிட்ட பல்வேறு வரி இனங்களை செலுத்தி வருகின்றனர்.கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இக்கட்டடம் புதுப்பிக்கப்பட்டு இரண்டாவது மண்டல அலுவலகம் திறக்கப்பட்டது. இந்நிலையில், இக்கட்டடத்தை மாநகராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், கட்டடத்தின் கூரையில் அரச மர செடிகள் வளர்ந்து வருகின்றன.இதனால், கூரையில் விரிசல் ஏற்பட்டு நாளடைவில், கட்டடத்தின் உறுதித்தன்மையும் கேள்விக்குறியாகும் நிலை உள்ளது. எனவே, மாநகராட்சி மண்டல அலுவலக கட்டட கூரையில் வளர்ந்து வரும் அரசமரச் செடிகளை வேருடன் எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.