ஊராட்சிகளுக்கு குப்பை சேகரிக்கும் பேட்டரி வாகனங்கள் வழங்கல்
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், சாலவாக்கம், பெருநகர், திருப்புலிவனம் ஆகிய ஊராட்சிகளுக்கு, குப்பை சேகரிக்கும் பேட்டரி வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.உத்திரமேரூர் தி.மு.க., -- எம்.எல்.ஏ., சுந்தர் பங்கேற்று, குப்பை சேகரிக்கும் பேட்டரி வாகனங்களை வழங்கினார். அதில், 2023 --- 24ம் நிதி ஆண்டில், தூய்மை பாரத இயக்கம் மற்றும் 15-வது நிதிக்குழு மானிய திட்டத்தின்கீழ், தலா, 2.52 லட்சம் கொண்ட 15.16 லட்சம் மதிப்பிலான 6 பேட்டரி வாகனங்கள் வழங்கப்பட்டன.வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.