உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / குலுக்கல் முறையில் ஓட்டுப்பதிவு இயந்திரம்; ஸ்ரீபெரும்புதுார் தொகுதிக்கு ஒதுக்கீடு

குலுக்கல் முறையில் ஓட்டுப்பதிவு இயந்திரம்; ஸ்ரீபெரும்புதுார் தொகுதிக்கு ஒதுக்கீடு

செங்கல்பட்டு : ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தொகுதியில், ஆறு சட்டசபை தொகுதிகளுக்கான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், இரண்டாம் கட்டமாக குலுக்கல் முறையில், நேற்று ஒதுக்கீடு செய்யப்பட்டன.ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தொகுதியில், 31 பேர் போட்டியிடுவதால், ஒவ்வொரு ஓட்டுச்சாவடிக்கும் தலா இரண்டு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரம், ஓட்டுப்பதிவு சரிபார்ப்பு இயந்திரம் தலா ஒன்று என, நான்கு இயந்தியங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.தொடர்ந்து, செங்கல்பட்டு கலெக்டர் கூட்ட அரங்கில், ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தொகுதிக்குட்பட்ட ஆறு சட்டசபை தொகுதிகளுக்குகான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், இரண்டாம் கட்டமாக குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கும் பணிகள், தேர்தல் அலுவலரும், கலெக்டருமான அருண்ராஜ் தலைமையில், நேற்று நடந்தது.இதில், மதுரவாயல், அம்பத்துார், ஆலந்துார், ஸ்ரீபெரும்புதுார், பல்லாவரம், தாம்பரம் ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கு, ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் இரண்டாம் கட்டமாக குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டது.ஆறு சட்டசபை தொகுதிகளில் 2,437 ஓட்டுச்சாவடிகளில், 4,874 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், 2,437 கட்டுப்பாட்டு கருவிகள், 2,437 ஓட்டுப்பதிவு சரிபார்ப்பு இயந்திரம் என, மொத்தம் 9,748 இயந்திரங்கள் தேவைப்படுகின்றன.இந்த இயந்திரங்கள் பழுது ஏற்படும் போது மாற்றாக பயன்படுத்த, 932 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், 466 கட்டுப்பாட்டு கருவிகள், 708 ஓட்டுப்பதிவு சரிபார்ப்பு இயந்திரங்கள் என, மொத்தம் 2,016 இயந்திரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.இந்த கூட்டத்தில், தேர்தல் பொது பார்வையாளர் அசோக் சந்திரா, மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி, கலெக்டரின் தேர்தலுக்கான நேர்முக உதவியாளர் சுப்பிரமணியன், தாசில்தார் சிவசங்கரன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ஓட்டுப்பதிவு இயந்திரங்கள்

சட்டசபை தொகுதி ஓட்டுச்சாவடி ஓட்டுப்பதிவு இயந்திரம் கட்டுப்பாட்டு கருவி ஓட்டுப்பதிவு சரிபார்ப்பு இயந்திரம்மதுரவாயல் 440 880 440 440அம்பத்துார் 350 700 350 350ஆலந்துார் 401 802 401 401ஸ்ரீபெரும்புதுார் 382 764 382 382பல்லாவரம் 437 874 437 437தாம்பரம் 427 854 427 427மொத்தம் 2,437 4,874 2,437 2,437


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ