ரேஷன் கார்டு திருத்தம் நாளை குறைதீர் முகாம்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், பொது வினியோக திட்டம் சார்பில், மாதந்தோறும், கிராமம் வாரியாக குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.அந்த வகையில், நாளை, உத்திரமேரூர் தாலுகாவில் புலிவாய் கிராமத்திலும், காஞ்சிபுரத்தில் ஊவேரியிலும், வாலாஜாபாத்தில் அகரம், ஸ்ரீபெரும்புதுாரில் கப்பாங்கோட்டூர், குன்றத்துாரில் வழுதலம்பேடு ஆகிய கிராமங்களில் குறைதீர் முகாம்கள் நடக்க உள்ளன.இதில், ரேஷன் கார்டில் திருத்தம், பெயர் சேர்த்தல், நீக்கம், மொபைல்போன் எண் பதிவு உள்ளிட்ட பல்வேறு சேவைகளை உடனடியாக பெற முடியும்.இந்த முகாமை பயன்படுத்திக் கொள்ள காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி கேட்டுக் கொண்டுள்ளார்.