உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / லிங்கபேஸ்வரர் கோவில் கோபுரத்தில் வளர்ந்துள்ள அரசமர செடிகள்

லிங்கபேஸ்வரர் கோவில் கோபுரத்தில் வளர்ந்துள்ள அரசமர செடிகள்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் தாயார் குளம் தெருவில், காயாரோகணேஸ்வரர் குரு கோவில் உள்ளது. பிரகஸ்பதியான குரு, இக்கோவிலில், மேற்கு நோக்கி வணங்கிய கோலத்தில் காட்சி தருகிறார்.குரு பரிகார ஸ்தலமான இக்கோவிலுக்கு வியாழக்கிழமை, பிரதோஷம், சிவராத்திரி, பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் திரளான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.இக்கோவில் வளாகத்தில் பைரவி என்னும் துறவி இனத்தவர் வழிபட்ட லிங்கபேஸ்வரர் சன்னிதி உள்ளது. இந்த சன்னிதி கோபுரத்தில் அரசமரச் செடிகள் வளர்ந்துள்ளன.இச்செடிகளின் வேர்களால் கோபுரத்தில் உள்ள சிற்பங்கள் சிதைந்து, நாளடைவில் கோபுரம் முழுதும் வலுவிழக்கும் சூழல் உள்ளது.எனவே, லிங்கபேஸ்வரர் சன்னிதி கோபுரத்தில் வளர்ந்துள்ள அரசமரச் செடிகளை வேருடன் அகற்ற ஹிந்து சமய அறநிலையத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை