உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / புஞ்சையில் சாலையோர பள்ளம் நெடுஞ்சாலை துறை சீரமைப்பு

புஞ்சையில் சாலையோர பள்ளம் நெடுஞ்சாலை துறை சீரமைப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் இருந்து, பெருநகர், மானாம்பதி, வந்தவாசி, திருவண்ணாமலை, அய்யங்கார்குளம், செய்யாறு, திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு செல்லும் வாகனங்கள் காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில், செவிலிமேடு பாலாறு மேம்பாலத்தை கடந்து புஞ்சையரசந்தாங்கல் வழியாக சென்று வருகின்றன.வாகன போக்குவரத்து அதிகம் உள்ள புஞ்சையரசந்தாங்கல் சாலையோரம், மழையின் காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டு சாலையோரம் பள்ளம் ஏற்பட்டு இருந்தது.இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் கனரக வாகனத்திற்கு வழிவிட சாலையோரம் ஒதுங்கும்போது, பள்ளத்தில் தவறி விழுந்து விபத்தில் சிக்கினர்.எனவே, சாலையோரம் பள்ளம் ஏற்பட்டுள்ள பகுதியில் மண் அணைத்து சாலையை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வந்தனர்.இந்நிலையில், காஞ்சிபுரம் நெடுஞ்சாலைத் துறை சார்பில், புஞ்சையரசந்தாங்கல் கிராமத்தில் சாலையோரம் பள்ளம் ஏற்பட்டுள்ள பகுதியில் பொக்லைன் இயந்திரம் வாயிலாக மண் அணைத்து சமன்படுத்தப்பட்டு, சாலை சீரமைப்பு பணி நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி