| ADDED : ஜூலை 21, 2024 07:21 AM
நெமிலி, : சென்னை - பெங்களூரு அதிவிரைவு சாலை போடும் பணி நடந்து வருகிறது. இதில், ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி தாலுகா வேட்டாங்குளம் பகுதியில், தனி நபருக்கு சொந்தமான மரங்களுக்கு, அதிவிரைவு சாலை அதிகாரிகள் இழப்பீடு தொகை வழங்கியும், அந்த தனிநபர் மரங்களை அகற்ற அனுமதிக்கவில்லை.இதனால், சாலை போடும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது என, அதிவிரைவு சாலை போடும் அதிகாரிகள் தரப்பில் அரக்கோணம் சப் - கலெக்டரிடம் புகார் அளித்திருந்தனர்.இதையடுத்து, அரக்கோணம் சப் - கலெக்டர் பாத்திமா மரங்களை அகற்ற வேண்டும் என, சமீபத்தில் உத்தரவு பிறப்பித்து இருந்தார்.நேற்று, நெமிலி தாசில்தார் ஜெயபிரகாஷ் மற்றும் அரக்கோணம் டி.எஸ்.பி., வெங்கடேசன், நெமிலி காவல் ஆய்வாளர் லட்சுமிபதி ஆகியோர் முன்னிலையில், அதிவிரைவு சாலை போடும் பணியாளர்கள், மரங்கள் அகற்றும் பணி செய்தனர்.