உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மாவட்ட விளையாட்டு மைதானத்தில் வாக்கிங் நேரத்தை நீட்டிக்க கோரிக்கை

மாவட்ட விளையாட்டு மைதானத்தில் வாக்கிங் நேரத்தை நீட்டிக்க கோரிக்கை

காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்க மைதானத்தில்,காலை 5:30 மணி முதல், 9:30 மணி வரை; மாலை 5:00 மணி முதல், இரவு 8:00 மணி வரை என, தினமும் 300க்கும் மேற்பட்டோர் நடைபயிற்சி மேற்கொண்டு வந்தனர்.இந்நிலையில், மாவட்ட விளையாட்டு அரங்கில், விளையாட்டு பயிற்சி பெறும் மாணவியருக்கான விடுதி சமீபத்தில் துவக்கப்பட்டு உள்ளதால், நடைபயிற்சி மேற்கொள்ள காலை 5:00 மணி முதல் - 6:30 மாலை 6:30 - 8:00 மணி வரை அனுமதிக்கப்படுகின்றனர்.காலை 6:30 மணிக்கு மேல் நடைபயிற்சிக்கு வருவோர் மாவட்ட விளையாட்டு அரங்க மைதானத்திற்குள் அனுமதி மறுக்கப்படுவதால், சிறிய அளவிலான ஹாக்கி விளையாட்டு மைதானத்தில் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளது.ஒரே நேரத்தில் நுாற்றுக்கணக்கானோர், சிறிய ஹாக்கி மைதானத்தில் நடைபயிற்சி மேற்கொள்ள சிரமம் ஏற்படுகிறது.எனவே, மாவட்ட விளையாட்டு அரங்க மைதானத்திற்குள் நடைபயிற்சி அனுமதி நேரத்தை காலை 5:00 - 6:30 மணி வரை என உள்ளதை, ஒரு மணி நேரம் கூடுலாக நீட்டித்து, 7:30 மணி வரை அனுமதிக்க வேண்டும் என, நடைபயிற்சி மேற்கொள்வோர் வலியுறுத்தி உள்ளனர்.காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ஜெயசித்ரா கூறியதாவது:மாவட்ட விளையாட்டு அரங்க வளாகத்தில், விளையாட்டு மாணவியருக்கான விடுதி துவக்கப்பட்டு, இங்கு தங்கியுள்ள 35 மாணவியருக்கு தேசிய அளவிலான தடகளம் போட்டியில், தமிழக அணி சார்பில், பங்கேற்பதற்கான பயிற்சி அளிக்கப்படுகிறது.மாணவியர் பயிற்சியில் ஈடுபடும்போது, பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொண்டால் இடையூறு ஏற்படும். இதனால் 5:00 - 6:30 மணி வரையிலும், மாலை 6:30 - 8:00 மணி வரை நடைபயிற்சி மேற்கொள்ள அனுமதிக்கப்படுகிறது.தேசிய அளவிலான தடகள போட்டியில் பங்கேற்று, நமது மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க உள்ள மாணவியரின் நலன்கருதி நடைபயிற்சி மேற்கொள்வோரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி