உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வாரணவாசியில் ரேஷன் கடை அமைக்க கோரிக்கை

வாரணவாசியில் ரேஷன் கடை அமைக்க கோரிக்கை

வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்டது வாரணவாசி. இக்கிராமத்தில், ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில், 224 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இப்பகுதி வாசிகள், பொது வினியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவுப் பொருட்களை பெற, 1.5 கி.மீ., துாரத்தில் உள்ள வாரணவாசி ரேஷன் கடைக்கு செல்கின்றனர்.இதனால், அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களை சிலர் இருசக்கர வாகனங்களிலும், ஆட்டோ வாயிலாகவும் ஏற்றி வருகின்றனர். வாகன வசதி இல்லாத முதியோர் மற்றும் பெண்கள், ரேஷன் கடைக்கு சென்று உணவுப் பொருட்கள் வாங்கி வர மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். மேலும், மழை மற்றும் வெயில் நேரங்களில், ரேஷன் கடைக்கு சென்றுவர அப்பகுதியினர் சிரமப்படுகின்றனர். எனவே, வாரணவாசி காலனி பகுதியில், பகுதி நேர ரேஷன் கடை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !