உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சாலையில் படுத்திருந்த மாடுகளை திருடிய மூவருக்கு காப்பு

சாலையில் படுத்திருந்த மாடுகளை திருடிய மூவருக்கு காப்பு

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் சிப்காட் போலீசார், நேற்று முன்தினம் இரவு, ஸ்ரீபெரும்புதுார் சிப்காட் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, சுங்குவார்சத்திரம் -- வல்லம் சிப்காட் சாலையில், சிறுமாங்காடு அருகே, இரண்டு மாடுகளை ஏற்றி வந்த 'டாடா ஏஸ்' வாகனத்தை மடக்கி விசாரித்தனர்.விசாரணையில், அவர்கள் சிப்காட் சாலைகளில் படுத்திருந்த மாடுகளை, விற்பனைக்காக திருடி சென்றது தெரிந்தது. இது குறித்து, சுங்குவார்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது,அங்கு வந்த போலீசார், மாடுகளை திருடிய, ராணிப்பேட்டை மாவட்டம், காப்புலாம் கிராமத்தைச் சேர்ந்த இன்பரசு, 22, சுகுமார், 21, பார்த்தசாரதி, 18, ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை