உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காற்றடித்தால் அசைந்தாடும் இரும்பு மின்கம்பம் ஷாக் அடிப்பதாக பகுதிவாசிகள் புகார்

காற்றடித்தால் அசைந்தாடும் இரும்பு மின்கம்பம் ஷாக் அடிப்பதாக பகுதிவாசிகள் புகார்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சி, ஒலிமுகமதுபேட்டை, தேவராஜபுரம் வேணுகோபால் தெருவில், அப்பகுதிவாசிகளின் கூடுதல் குடிநீர் தேவைக்காக தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.தொட்டி அருகில், வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட பழைய இரும்பு மின்கம்பம் ஒன்று உள்ளது.மழைகாலத்திலும், தண்ணீர் பிடிக்கும்போது ஈர கையுடன் மின்கம்பத்தை தொடும்போது, லேசாக ஷாக் அடிப்பதாக அப்பகுதிவாசிகள் புகார் தெரிக்கின்றனர்.இதுகுறித்து அப்பகுதிவாசிகள் கூறியதாவது:பழைய இரும்பு மின்கம்பத்தின் அடிப்பகுதி துருப்பிடித்துள்ளதால், காற்றடிக்கும்போது மின்கம்பம் அசைந்தாடுகிறது. மேலும், குழாயில் தண்ணீர் பிடிக்கும்போது சிதறும் நீர்த்துளிகளாலும், மழைக்காலத்தில் மின்கம்பத்தை தொடும்போது லேசாக ஷாக் அடிக்கிறது.இதனால், சிறுவர்கள், குழந்தைகள் பாதிக்கப்படும் சூழல் உள்ளதால், இரும்பு கம்பத்தை அகற்றிவிட்டு, சிமென்ட் கம்பம் அமைக்க வேண்டும் என, வலியுறுத்தினோம். இதை தொடர்ந்து மின்வாரியம் சார்பில், புதிய சிமென்ட் கம்பம் அமைக்க கடந்த மாதம் பழைய இரும்பு கம்பம் அருகில் பள்ளம் தோண்டப்பட்டது.ஆனால், புதிய சிமென்ட் கம்பம் அமைக்காமல், தோண்டிய பள்ளத்தை மூடிவிட்டு சென்று விட்டனர். இதனால், காற்றடிக்கும்போது மின்கம்பம் சாய்ந்து விழும் நிலை உள்ளது. லேசாக ஷாக் அடிக்கும் மின்கம்பத்தால் பெரிய அளவில் மின்விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.எனவே, பழைய இரும்பு மின் கம்பத்தை அகற்றிவிட்டு, புதிய சிமென்ட் கம்பம் அமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ