மேலும் செய்திகள்
குவாரி குத்தகை உரிமம்
21-Feb-2025
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாலாஜாபாத், உத்திரமேரூர், குன்றத்துார் மற்றும் ஸ்ரீபெரும்புதுார் ஆகிய தாலுகாக்களில், கல் குவாரி குத்தகை உரிமம் வழங்கப்பட்டு, குவாரி பணிகள் நடைபெற்று வருகின்றன.வாகனங்களில் ஏற்றிச் செல்லும் கனிமங்களை கண்காணிக்கவும், அனுமதிக்கப்பட்டுள்ள அளவிற்கு கூடுதலாக கனிமம் எடுத்துச் செல்வதை தடுக்கவும், வாகனங்களுக்கு வழங்கப்படும் நடை சீட்டு இணையதளம் வாயிலாக வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதன் அடிப்படையில், காஞ்சிபுரம் மாவட்டத்தின் குவாரி குத்தகைதாரர்களுக்கு இணையதளம் வாயிலாக 'இ - பர்மிட்' வழங்கும் நடைமுறை, நாளை மறுநாள் முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.குவாரி குத்தகை உரிமம் கோரும் விண்ணப்பங்களை, வரும் 25 முதல் mimas.tn.gov.inஎன்ற இணையதளம் வாயிலாக மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும் என, கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.
21-Feb-2025