மேலும் செய்திகள்
மண் அரிப்பால் பள்ளமான சாலை
08-Aug-2024
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையத்தை ஒட்டியுள்ள காமாட்சியம்மன் சன்னிதி தெருவில் இருந்து வடக்கு கிருஷ்ணன், தெற்கு கிருஷ்ணன், பூக்கடை சத்திரம், தாமல்வார் தெருவிற்கு செல்லும் சாலை உள்ளது.இந்த சாலையில் மண் அரிப்பு ஏற்பட்டு பள்ளம் ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் ஒரு நாள் மழைக்கே மழைநீர், சகதிநீர் போல தேங்குவது வாடிக்கையாகஉள்ளது. இதில் செல்லும்இருசக்கர ஓட்டிகள்பள்ளம் இருப்பது தெரியாமல் அடிக்கடி தவறி விழுந்து காயமடைகின்றனர்.மேலும், வேகமாக செல்லும் வாகனங்களால் சகதிநீர் தெளிப்பதால் பாதசாரிகள் மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர்.எனவே, சேதமடைந்த சாலையை 'பேட்ச் ஒர்க்' பணியாக சீரமைக்கமாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளன.
08-Aug-2024