உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / போதை ஊசி ஏற்றி ரவுடி தற்கொலை

போதை ஊசி ஏற்றி ரவுடி தற்கொலை

எம்.கே.பி.நகர்:சென்னை, வியாசர்பாடியை சேர்ந்த ரவுடி சத்யநாராயணன், 24. இவர் மீது, எம்.கே.பி.நகர், கொடுங்கையூர் காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. கஞ்சா, போதை பழக்கத்திற்கு அடிமையான சத்யநாராயணன், வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார்.நேற்று மாலை சத்யநாராயணன் தற்கொலை முயற்சியாக, போதை மாத்திரைகளை ஊசியில் ஏற்றி தனக்கு தானே செலுத்தி கொண்டதாக கூறப்படுகிறது. மயக்கத்தில் இருந்த சத்யநாராயணனை அக்கம்பக்கத்தினர் மீட்டு, ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை