மேலும் செய்திகள்
சாய்ந்த நிலையில் மின்கம்பம் பெருங்கோழியில் விபத்து அபாயம்
12 hour(s) ago
விவசாயிகள் தின விழா
12 hour(s) ago
களக்காட்டூரில் பயணியர் நிழற்குடை அமைப்பு
12 hour(s) ago
காஞ்சிபுரம், : காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், இரண்டு ஆண்டுகள் வட இந்திய விஜய யாத்திரை நிறைவு செய்து, கடந்த மார்ச் 20ம் தேதி, காஞ்சிபுரம் சங்கரமடத்திற்கு வருகை தந்தார். அன்று முதல், சங்கரமடத்தில் சந்திரமவுலீஸ்வரர் பூஜை செய்து வருகிறார்.இந்நிலையில் நேற்று மாலை, காஞ்சிபுரம் ஓரிக்கையில் உள்ள மஹா பெரியவா மணிமண்டபத்தில், சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சந்திரமவுலீஸ்வரர் பூஜை செய்வதற்காகவே அமைக்கப்பட்ட பூஜா மண்டபத்திற்கு சென்றார்.முன்னதாக, மணி மண்டப நுழைவு வாயிலில் மண்டபத்தின் நிர்வாக அறங்காவலர் மணி ஐயர் தலைமையில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.விஜயேந்திரர் வழங்கிய அருளுரை:காஞ்சிபுரம் அடுத்த வேடல் கிராமத்தில் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளால் உருவாக்கப்பட்ட ஓலைச்சுவடிகள் கண்காட்சி உள்ளது. அந்த ஓலைச்சுவடிகளில் பல தத்துவ சாஸ்திரங்கள் நிரம்பியிருக்கின்றன. அவற்றை நாம் பத்திரமாக பாதுகாக்க வேண்டும்.எண்ணங்களே மனிதனை உருவாக்குகின்றன. நல்ல எண்ணங்களை உருவாக்குவதே சிறந்த தர்மம்இவ்வாறு அவர் அருளுரையாற்றினார்.காஞ்சி சங்கர மடத்தின் மேலாளர் சுந்தரேச அய்யர், ஸ்ரீகாரியம் செல்லா.விஸ்வநாத சாஸ்திரி உட்பட பலர் உடனிருந்தனர்.
12 hour(s) ago
12 hour(s) ago
12 hour(s) ago