மயங்கி விழுந்து உயிரிழந்த மாணவர் உடலில் விஷம்
செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த புலிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த அமாவாசை மகன் சுபனேஷ், 19. ஆத்துார் பகுதியில் உள்ள தனியார் கல்லுாரியில், பி.காம்., இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.நேற்று காலை, சுபனேஷ்செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் மயங்கி கிடந்ததை கண்ட பயணியர், 108 ஆம்புலன்ஸ் வாயிலாக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு, சுபனேஷை மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது,அவர் ஏற்கனவே உயிரிழந்ததும், மேலும் உடலில் விஷம் கலந்து இருந்ததும் தெரியவந்தது.இதுகுறித்து, செங்கல்பட்டு நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து, சுபனேஷ் மரணம்குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.