உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மாடியில் இருந்து தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு

மாடியில் இருந்து தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு

குரோம்பேட்டை : குரோம்பேட்டை, லட்சுமிபுரத்தைச் சேர்ந்த ரோமன் குமார் என்பவரின் மகன் சிமியோன், 15. மனநலம் பாதிக்கப்பட்ட இந்த சிறுவன், வீட்டிலேயே இருந்து வந்ததாகவும், சில நேரங்களில் அமைதியாகவும், சில நேரங்களில் ஆக்ரோஷமாகவும் காணப்படுவார் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு, இரண்டு தளங்கள் கொண்ட வீட்டின் இரண்டாவது மாடியில், தாயுடன் உணவு அருந்திவிட்டு, பால்கனி ஓரமாக அமர்ந்திருந்த சிமியோன், எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார்.அப்போது, முதல் தளத்தின் ஓரமாக செல்லும், உயர் மின்னழுத்த வடத்தில் சிக்கி, மின்சாரம் பாய்ந்து கீழே விழுந்தார். அங்கிருந்தவர்கள் சிறுவனை மீட்டு, குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனையில் சிறுவன் இறந்தது தெரியவந்தது. குரோம்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை