உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பெரியாண்டவர் கோவிலில் திருக்கல்யாண வைபவம்

பெரியாண்டவர் கோவிலில் திருக்கல்யாண வைபவம்

உத்திரமேரூர் : உத்திரமேரூர் அடுத்த, காக்கநல்லூரில், பெரியநாயகி அம்பாள் சமேத பெரியாண்டவர் கோவில் உள்ளது. இக்கோவிலில், 9ம் ஆண்டு திருவிழா நேற்று நடந்தது.விழாவையொட்டி, காக்கநல்லூர் பஜனை கோவிலில் இருந்து, அப்பகுதி பெண்கள் பால் குடம் எடுத்து ஊர்வலமாக பெரியாண்டவர் கோவில் வந்தடைந்தனர். அங்கு சுவாமிக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. அதை தொடர்ந்து சுவாமிகளுக்கு புதிய வஸ்திரங்களை அணிவித்து, திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !