மேலும் செய்திகள்
ஊருக்குள் வெள்ளம் புகுந்ததால் அவதி
11-Sep-2024
உத்திரமேரூர் உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட திருமுக்கூடல் கிராமத்தில், பொதுப்பணி துறைக்கு சொந்தமான, 100 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது. இந்த ஏரி நீர் பாசனத்தை பயன்படுத்தி, அப்பகுதி விவசாயிகள், 250க்கும் மேற்பட்ட ஏக்கரில்விவசாயம் செய்து வருகின்றனர்.ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில், பல ஆண்டுகளாக துார்வாராததால், கடற்பாலை செடிகள் உள்ளிட்ட பல வகையான செடிகள் வளர்ந்து புதராக காட்சி அளிக்கிறது.இதனால், மழைக் காலங்களில் ஏரியில் நீர் சேகரமாவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.மேலும், ஏரி புதர் மண்டி கிடப்பதால் ஏரியில் தேங்கும் தண்ணீரின் அளவு குறித்து கணிக்க முடியாமல் இறுதிக்கட்ட பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்காமல், விவசாயிகள் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.எனவே, திருமுக்கூடல் ஏரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மண்டியுள்ள புதரை அகற்ற, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
11-Sep-2024