| ADDED : ஜூலை 22, 2024 11:17 PM
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் காமகோடி பீடம், சங்கரமடத்தின் 69வது பீடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய சுவாமிகளின் 90வது ஜெயந்தி மஹோத்ஸவம், காஞ்சிபுரம் சங்கரமடத்தில் இன்று நடை பெறுகிறது.காஞ்சிபுரம் சங்கரமடத்தின், 70வது பீடாதிபதிசங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின்ஆக்ஞைப்படி, காஞ்சிபுரம் சங்கரமடத்தில் உள்ள ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிருந்தாவனத்தில், இன்று, காலை 8:00 மணிக்கு சதுர்வேத பாராயணம், ஏகாதச ருத்ரம், ஹோமம், ஜபம் வேத பாக்ஷ்ய ஸதஸ் மற்றும் விசேஷ அபிஷேகஆராதனை நடைபெறுகிறது.மாலை 4:35 மணிக்கு ஸ்ரீராமர் பட்டாபிஷேகமும், நாட்டுப்புற கலைநிகழ்ச்சியும், மாலை 5:00 மணிக்கு வீரமணி ராஜு குழுவினரின் இன்னிசை கச்சேரியும், இரவு 7:00 மணிக்கு நலிந்த கிராமப்புற கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழாவும் நடக்கிறது.இரவு 7:30 மணிக்கு ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய சுவாமிகளின் தங்க ரத ஊர்வலம் நான்கு ராஜ வீதிகளிலும் உலா வருகிறது.விழாவிற்கான ஏற்பாட்டை சங்கரமடம்ஸ்ரீகார்யம் செல்லா விஸ்வநாத சாஸ்திரிசெய்துள்ளார்.