உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சாலை விபத்தில் வியாபாரி பலி

சாலை விபத்தில் வியாபாரி பலி

வாலாஜாபாத்:வாலாஜாபாத் அடுத்த, புளியம்பாக்கம், கெங்கையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கண்ணாயிரம், 84; மர வியாபாரி. இவர், கடந்த 21ம் தேதி, அப்பகுதி சாலை வழியாக வந்த டிராக்டர் மூலம் வாலாஜாபாத் சென்று கொண்டிருந்தார்.அப்போது, திடீரென பிரேக் போட்டதால் டிரைவர் பக்கத்தில் அமர்ந்திருந்த கண்ணாயிரம் நிலை தடுமாறி விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த கண்ணாயிரத்தை அப்பகுதியினர் மீட்டு செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர்.இந்நிலையில், அவர், நேற்று உயிரிழந்தார். வாலாஜாபாத் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்