உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ராஜிவ் படுகொலையில் உயிரிழந்த போலீசாருக்கு ஸ்ரீபெரும்புதுாரில் அஞ்சலி

ராஜிவ் படுகொலையில் உயிரிழந்த போலீசாருக்கு ஸ்ரீபெரும்புதுாரில் அஞ்சலி

ஸ்ரீபெரும்புதுார் : ஸ்ரீபெரும்புதுாரில், மனித வெடிகுண்டு வாயிலாக, முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட போது, அவருடன் உயிரிழந்த ஒன்பது போலீசாருக்கு, ஸ்ரீபெரும்புதுார் போலீஸ் நிலையத்தில் நேற்று மாவட்ட கண்காணிப்பாளர் சண்முகம் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.ஸ்ரீபெரும்புதுாரில், 1991ம் ஆண்டு, மே 21ம் தேதி நடந்த பொது கூட்டத்தில் மனித வெடிகுண்டு மூலம், முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி உட்பட பலர் கொல்லப்பட்டனர். இதில், அப்போதைய எஸ்.பி., முகம்மது இக்பால், இரண்டு இன்ஸ்பக்டர்கள் உட்பட 9 போலீசார் உயிரிழந்தனர்.இந்த நிலையில், அவர்கள் மறைந்து 33வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, ஸ்ரீபெரும்புதுார் போலீஸ் நிலைய வளாகத்தில் உள்ள நினைவு துாணிற்கு நேற்று அஞ்சலி செலுத்தப்பட்டது.காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி., சண்முகம் தலைமை தாங்கினார். முன்னாள் தமிழக டி.ஜி.பி., தேவாரம் உட்பட, போலீஸ் உயர் அதிகாரிகள் பங்கேற்று, மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதில், ஸ்ரீபெரும்புதுார் இன்ஸ்., பரந்தாமன் மற்றும் போலீசார் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை