மேலும் செய்திகள்
கொள்முதல் நிலையத்தில் 7,000 நெல் மூட்டைகள் தேக்கம்
9 hour(s) ago
அலுவலக உதவியாளர் பணி 5 பேருக்கு 734 பேர் போட்டி
11 hour(s) ago
இன்று இனிதாக .... (11.10.2025) காஞ்சிபுரம்
14 hour(s) ago
காஞ்சிபுரம், : காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம், கலெக்டர் வளாக கூட்டரங்கில், கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் நேற்று நடந்தது. பரபரப்பு
கூட்டரங்கு வெளியே, பெரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த முத்தம்மாள், 80, என்ற மூதாட்டி, தன் பட்டா நிலத்தை வேறு நபர் அபகரித்துவிட்டதாக அழுது புலம்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.பட்டா விபரங்கள் சரி பார்க்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், மூதாட்டியிடம் தெரிவித்ததை தொடர்ந்து, சற்று நேரம் கழித்து மூதாட்டி புறப்பட்டு சென்றார்.தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில், 464 பேர் தங்களின் கோரிக்கை மனுக்களை அளித்தனர். மனுக்களை பெற்ற கலெக்டர் கலைச்செல்வி, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி, உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 10 பேருக்கு, மாற்றுத்திறனாளி பாதுகாவலர் சான்றுகளையும், 10 அங்கன்வாடி பணியாளர்களுக்கு மொபைல் போன்களையும் கலெக்டர் வழங்கினார். நடவடிக்கை
காஞ்சிபுரம் மாவட்டத்தில், 10 ஆண்டுகளுக்கு மேலாக, மணல் குவாரி மூடப்பட்டுள்ளது. இதனால், சுற்றுவட்டார பகுதிகளில் மணல் லாரி கூலி தொழிலாளர்கள், டிரைவர்கள், கட்டுமான தொழிலாளர்கள் என, பல தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.இவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க, காஞ்சிபுரம் மாவட்டத்தில் மணல் குவாரி மற்றும் சவுடு மண் குவாரி திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, காஞ்சிபுரம் நகர மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் மனு அளித்தனர்.
9 hour(s) ago
11 hour(s) ago
14 hour(s) ago