மேலும் செய்திகள்
பள்ளியில் ஓவிய கண்காட்சி
4 hour(s) ago
மக்காச்சோள தட்டை சாகுபடியில் தண்டரை விவசாயிகள் ஆர்வம்
4 hour(s) ago
சென்னை, : டைல்ஸ்' ஒட்டும் தொழிலாளிகளை கத்தியால் வெட்டி, நகை பறித்துச் சென்ற இருவரை போலீசார் கைது செய்தனர். அமைந்தகரையைச் சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன், 33. இவரது நண்பர் தினேஷ், 34. இருவரும் 'டைல்ஸ்' ஒட்டும் வேலை செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து, 'பைக்'கில் வீடு திரும்பினர். பூந்தமல்லி நெடுஞ்சாலை, அமைந்தகரை அருகே சென்ற போது, அவ்வழியாக பைக்கில் வந்த மர்ம நபர்கள், ஹரிகிருஷ்ணனை வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி பணம், நகை கேட்டனர்.அவர் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த மர்ம நபர்கள், தினேஷை கத்தியால் வெட்டிவிட்டு, ஹரிகிருஷ்ணன் கழுத்தில் அணிந்திருந்த இரண்டு சவரன் நகையை பறித்துச் சென்றனர். இதுகுறித்து அமைந்தகரை போலீசார் விசாரித்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த புருஷோத்தமன், 39, அமைந்தகரை, ஷெனாய் நகரைச் சேர்ந்த முருகன், 40, ஆகிய இருவரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.அவர்களிடம் இருந்து பைக், கத்தி, நகை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
4 hour(s) ago
4 hour(s) ago