உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஓசியில் மது கேட்டு தர மறுத்த இருவருக்கு கத்தி வெட்டு

ஓசியில் மது கேட்டு தர மறுத்த இருவருக்கு கத்தி வெட்டு

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் அருகே, போந்துார் பகுதியைச் சேர்ந்த வேல்முருன், 41. ராணிப்பேட்டை மாவட்டம் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சங்கீத்குமார், 32. இருவரும் நேற்று முன்தினம் மாலை, ஒரகடம் மேம்பாலம் அருகில் உள்ள டாஸ்மாக் கடை அருகே அமர்ந்து மது அருந்தினார்.அப்போது, அதே பகுதியில் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்த மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த கண்ணன், 39, மது போதையில், வேல்முருகனிடம் சென்று மது அருந்த பணம் கேட்டு தகராறு செய்துள்ளார்.இதனால், இருவருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த வேல்முருகன், கண்ணனை கன்னத்தில் அறைந்து அங்கிருந்து துரத்தியுள்ளார்.இதையடுத்து, சிறிது நேரத்திற்கு பின் மீண்டும் கத்தியுடன் அங்கு வந்த கண்ணன், வேல்முருகன் மற்றும் சங்கீத்குமார் இருவரை கத்தியால் வெட்டினார். இதில், வேல்முருன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சங்கீத்குமார் லேசான வெட்டு காயம் அடைந்தார்.ஒரகடம் போலீசார் இருவரையும் மீட்டு, மாத்துாரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிக்கிச்சைக்காக அனுப்பி, கண்ணனை தேடி வருகின்றனர்.ஒரகடம் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள இந்த டாஸ்மாக் அருகே, மது அருந்துவோர்கள், மது போதையில் அடிக்கடி தகராறில் ஈடுபடுவது வாடிக்கையாகி உள்ளது.இதனால், மாலை நேரத்தில் பேருந்து நிறுத்தம் செல்லும் பெண்கள் மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே, பிரச்னைக்குறிய அந்த டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ