உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / உத்திரமேரூர் அரசு பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம்

உத்திரமேரூர் அரசு பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம்

காஞ்சிபுரம்,:உத்திரமேரூர், 1 - 3வது வார்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம், பள்ளி தலைமை ஆசிரியை சந்தான லட்சுமி தலைமையில் நேற்று நடந்தது.கூட்டத்தில், 200க்கும் மேற்பட்ட பெற்றோர் பங்கேற்றனர். இதில், பள்ளி மேலாண்மை குழு தலைவர், துணை தலைவர், உள்ளாட்சி பிரதிநிதிகள், தலைமை ஆசிரியர்,ஆசிரியர் பிரதிநிதி பெற்றோர் என, 24 பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் பொறுப்பேற்றனர். தொடர்ந்து, பள்ளிக்கு விளையாட்டு மைதானம் அமைத்து தருதல், பள்ளியின் வளர்ச்சிக்கு தேவையான கட்டமைப்பை உறுதி செய்தல், பள்ளியில் உள்ள கழிப்பறையை நவீன மயமாக்குதல்உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி