உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மாடுகளுக்கு தடுப்பூசி முகாம்

மாடுகளுக்கு தடுப்பூசி முகாம்

உத்திரமேரூர்:கோமாரி நோயை கட்டுப்படுத்தும் வகையில், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் மாடுகளுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக உத்திரமேரூர் ஒன்றியத்தில், சிறுமையிலுார் கால்நடை மருந்தகம் சார்பில், ஆனம்பாக்கம், திருமுக்கூடல், பழவேரி கிராமங்களில் பராமரிக்கப்படும் கால்நடைகளுக்கு நேற்று தடுப்பூசி போடப்பட்டது.தொடர்ந்து, இம்மாதம் முழுதும் தடுப்பூசி போடப்பட உள்ளது. கால்நடை பராமரிப்போர் ஒத்துழைப்பு தந்து தங்களது மாடுகளுக்கு தடுப்பூசி போட முன்வர வேண்டும் என கால்நடை மருந்தகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை