மேலும் செய்திகள்
குளத்தில் தவறி விழுந்த மூதாட்டி பலி
30-Sep-2025
மின் மயானம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மனு
30-Sep-2025
ஆண்டிற்கு ஒரு லட்சம் பனை விதைகள் நடவு விழா
30-Sep-2025
விவசாயிகள் கடன் பெறும் வழிமுறை விளக்க கூட்டம்
30-Sep-2025
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் ஹேண்ட்பால் சங்கத்தின் சார்பில், மாவட்ட அளவிலான ஹேண்ட் பால் போட்டி காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லுாரியில் நடந்தது.காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகள் மற்றும் கல்லுாரி மாணவர்கள், ஹேண்ட் பால் விளையாட்டு வீரர்கள் அடங்கிய சீனியர்களுக்கான போட்டி என, இரு பிரிவாக போட்டி நடத்தப்பட்டன. இரு பிரிவுகளிலும் நான்கு அணிகள் பங்கேற்றதில், லீக் முறையில் போட்டிகள் நடத்தப்பட்டன.பள்ளிகளுக்கான போட்டிகளில் வாலாஜாபாத் அகத்தியா மெட்ரிக்குலேஷன் பள்ளி சீனியர் அணியினர், அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று முதலிடத்தையும், பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளி இரண்டாம் இடத்தையும் பெற்றனர்.சீனியர்களுக்கான பொது போட்டிகளில் காஞ்சிபுரம் நகர அணியை சார்ந்த வீரர்கள் முதலிடத்தையும், காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லுாரி அணி இரண்டாம் இடத்தையும் பெற்றனர்.வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா, காஞ்சிபுரம் மாவட்ட ஹேண்ட்பால் சங்கத்தின் பொருளாளர் பாலமுருகன் தலைமையில் நடந்தது.காஞ்சிபுரம் ஹேண்ட்பால் சங்க தலைவர் செந்தில் தங்கராஜ், செயலர் சசிகுமார் ஆகியோர் பரிசு வழங்கினர். துணை தலைவர் மகேந்திரன் நன்றி கூறினார்.
30-Sep-2025
30-Sep-2025
30-Sep-2025
30-Sep-2025