உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / புழுதி பரவலை கட்டுப்படுத்த நெடுஞ்சாலையில் தண்ணீர் தெளிப்பு

புழுதி பரவலை கட்டுப்படுத்த நெடுஞ்சாலையில் தண்ணீர் தெளிப்பு

வாலாஜாபாத்: காஞ்சிபுரம்- செங்கல்பட்டு சாலையில், பழைய சீவரம் உள்ளது. மதுார், சிறுதாமூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள கல் குவாரிகள் மற்றும் 'கிரஷர்'களுக்கு செல்லும் லாரிகள், சென்னை புறநகர் தொழிற்சாலைகளுக்கு மூலப் பொருட்களை ஏற்றிச் செல்லும் லாரிகள், இச்சாலையில் தொடர்ந்து இயங்கி வருகின்றன.காஞ்சிபுரம்- - செங்கல்பட்டு சாலையை, நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி, கடந்த சில நாட்களாக நடைபெறுகிறது. இந்நிலையில், பழைய சீவரம் மற்றும் உள்ளாவூர் உள்ளிட்ட சாலைகளில், லாரிகளால் மண் குவியல் தேக்கமாகி, அதிக அளவில் புழுதி பறக்கிறது.இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் அவதிப்படுகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். இதுகுறித்து, அவ்வப்போது நம் நாளிதழில் செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், மண் புழுதி பறக்கும் பழைய சீவரம் சாலை பகுதியில், நெடுஞ்சாலைத்துறை சார்பில், காலை மற்றும் மாலை நேரங்களில் லாரி வாயிலாக தண்ணீர் ஊற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.ஆனாலும், மண் புழுதியை கட்டுப்படுத்த நிரந்தர தீர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை