உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / புதர்மண்டிய கால்வாய் சீரமைப்பது எப்போது?

புதர்மண்டிய கால்வாய் சீரமைப்பது எப்போது?

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் தெய்வசிகாமணி நகர் -- எம்.எம்.அவென்யூ இடையே மழைநீர் மற்றும் வீட்டு உபயோக கழிவுநீர் செல்லும் கால்வாய் உள்ளது.இக்கால்வாயை மாநகராட்சி நிர்வாகம் கால்வாயை முறையாக பராமரிக்காதததால், தெய்வசிகாமணி நகர் அம்மா பூங்கா ஒட்டியுள்ள பகுதியில் கால்வாயில் கோரைபுற்கள் புதர்போல மண்டியுள்ளது.மேலும், பிளாஸ்டிக் பாட்டில் உள்ளிட்ட குப்பை கழிவுகளால் கால்வாய் துார்ந்த நிலையில் உள்ளது. இதனால், காஞ்சிபுரத்தில் பலத்த மழை பெய்தால், கால்வாய் வாயிலாக மழைநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படும் சூழல் உள்ளது.எனவே, வடகிழக்கு பருவமழை துவங்குவதற்குள் தெய்வசிகாமணி நகர் பூங்கா ஒட்டியுள்ள பகுதியில் கால்வாயில் மண்டிகிடக்கும் கோரை புற்களையும், குப்பை கழிவுகளையும் அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை