உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஆபத்தான சாலை வளைவுகளில் வேகத்தடை ஏற்படுத்தப்படுமா?

ஆபத்தான சாலை வளைவுகளில் வேகத்தடை ஏற்படுத்தப்படுமா?

உத்திரமேரூர், : உத்திரமேரூர் ஒன்றியம், கரும்பாக்கத்தில் இருந்து, அரும்புலியூர் வழியாக அருங்குன்றம் செல்லும் இணைப்பு சாலை உள்ளது. இச்சாலை வழியில், அரும்புலியூர், சீத்தாவரம், பழவேரி உள்ளிட்ட பல கிராமங்கள் உள்ளன.சுற்று வட்டாரத்தில் உள்ள, கிராமங்களைச் சேர்ந்தவர்களும், இருசக்கர வாகனங்கள் மூலம் இச்சாலையை பயன்படுத்தி, சுற்றுவட்டார பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.இச்சாலையில், அரும்புலியூர் அருகே அடுத்தடுத்த மூன்று இடங்களில் அபாயகரமான வளைவுகள் உள்ளன. அப்பகுதியில், எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.இரவு நேரங்களில் மின்வசதி இல்லாமல் இருள் சூழ்ந்துள்ளதால், வாகன ஓட்டிகள் அச்சத்தோடு வாகனங்களை இயக்கும் நிலை உள்ளது.எனவே, இச்சாலையில் உள்ள வளைவு பகுதிகளில், எச்சரிக்கை பலகை மற்றும் தடுப்பு அமைத்து, விபத்துகள் எற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதியினர் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை