உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சாலையோரம் நடப்பட்ட கருவேல கிளைகள் அகற்றப்படுமா?

சாலையோரம் நடப்பட்ட கருவேல கிளைகள் அகற்றப்படுமா?

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, தொடூர் கிராமத்தில் இருந்து, மடப்புரம் வழியாக மேல் பொடவூர் கிராமத்திற்கு செல்லும் சாலை உள்ளது.இந்த சாலை வழியாக மேல் பொடவூர், மேல் பொடவூர் காலனி, நெல்வாய் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த வாகன ஓட்டிகள் தொடூர் மற்றும் நீர்வள்ளூர் ஆகிய பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.இதில், தொடூர் நீர் வளத்துறை ஏரிக்கரையோரம், விவசாயின் வயல் பாதுகாப்புகக்கு, சீமைக்கருவேல மரங்களின் கிளைகளை வெட்டி சாலை ஓரம் நட்டுள்ளனர்.இது, தொடூர் - மேல்பொடவூர் சாலையோரம் இருப்பதால், வாகன ஓட்டிகளின் கண்களை பதம் பார்க்கும் அளவிற்கு, இடையூறாக உள்ளது.வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குவதற்கு முன், சாலையோரம் நடப்பட்ட சீமைக்கருவேல கிளைகளை அகற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை