உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / குழந்தை பெற்றெடுத்த பெண் கவனிப்பாரின்றி உயிரிழப்பு

குழந்தை பெற்றெடுத்த பெண் கவனிப்பாரின்றி உயிரிழப்பு

உத்திரமேரூர்:வாலாஜாபாத் தாலுகா, ஊத்துக்காடு கிராமத்தை சேர்ந்த ரமேஷ், மனைவி செல்வி, 23, உட்பட 10க்கும் மேற்பட்டோர், உத்திரமேரூர் அடுத்த திருப்புலிவனம் பகுதியில் கொட்டகை அமைத்து, மரம் வெட்டும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.இந்நிலையில், ரமேஷ் கர்ப்பிணி மனைவியை கொட்டகையிலேயே விட்டுவிட்டு, வழக்கம்போல் மரம் வெட்டும் பணிக்கு, சக தொழிலாளர்களுடன் சென்றார்.அப்போது, செல்விக்கு பிரசவ வலி ஏற்பட்டு குழந்தை பிறந்துள்ளது. பின், மாலை 6:00 மணிக்கு கொட்டகைக்கு ரமேஷ் வந்தார். அப்போது, செல்வி ஆண் குழந்தை பிரசவித்த நிலையில் இறந்து கிடந்தார்.இதுகுறித்து, அப்பகுதிவாசிகள் உத்திரமேரூர் சுகாதார துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால், சுகாதாரத் துறையினர், நேற்று காலை 10:00 மணிக்கு தான் சம்பவ இடத்திற்கு வந்தனர். அதுவரை பிரசவித்த ஆண் குழந்தைக்கு, எந்தவித முதலுதவி சிகிச்சையும் இல்லாமல், 12 மணி நேரமாக அங்கேயே இருந்தது.இதையடுத்து, சுகாதார துறையினர் குழந்தையை மீட்டு, களியாம்பூண்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து உத்திரமேரூர் போலீசார் விசாரிக்கின்றனர். கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ