உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மது விற்ற பெண் கைது 175 மதுபாட்டில் பறிமுதல்

மது விற்ற பெண் கைது 175 மதுபாட்டில் பறிமுதல்

ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் அடுத்த கீவளூர் கிராமத்தில், வீட்டில் மது பாட்டில் பதுக்கி, கள்ளச் சந்தையில் விற்பனை செய்வதாக ஸ்ரீபெரும்புதுார் போலீசாருக்கு புகார் வந்தது.அதன் படி, கீவளூர் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில், ஸ்ரீபெரும்புதுார் போலீசார் நேற்று முன்தினம் இரவு சோதனையில் ஈடுபட்டனர். இதில், கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்காக, 175 மதுபாட்டிகள் வீட்டில் பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது.இதையடுத்து, மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், வீட்டின் உரிமையாளர் பூசனம், 40, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி