உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கேலோ இந்தியா சார்பில் பெண்கள் சைக்கிள் போட்டி

கேலோ இந்தியா சார்பில் பெண்கள் சைக்கிள் போட்டி

திருப்போரூர்: திருப்போரூர் ஆறுவழிச் சாலையில், கேலோ இந்தியா அமைப்பின் சார்பில், பெண்களுக்கான சைக்கிள் போட்டிகள் நேற்று நடந்தன. இதில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களிலிருந்து, 100 பெண்கள் பங்கேற்றனர்.மகளிருக்கான 36 கி.மீ., எலைட் பிரிவில், தமிழகத்தைச் சேர்ந்த கஸ்துாரி முதலிடம் பிடித்து தங்க பதக்கம், 10,000 ரூபாய் ஊக்கத்தொகை பெற்றார்.கர்நாடகாவை சேர்ந்த அக் ஷதா பூதானால் இரண்டாமிடம் பிடித்து, வெள்ளி பதக்கம், 6,000 ரூபாய் ஊக்கத்தொகை பெற்றார். கர்நாடகாவை சேர்ந்த அக் ஷதா பிராதர் மூன்றாமிடம் பிடித்து, வெண்கலம் பதக்கம், 4,000 ரூபாய் ஊக்கத்தொகை பெற்றார்.அதேபோல், 30 கி.மீ., இளம்பெண்கள் பிரிவில், கர்நாடகாவை சேர்ந்த பாயல் சவான் முதலிடம் பிடித்தார். தமிழகத்தைச் சேர்ந்த நிறைமதி இரண்டாமிடமும், கர்நாடகாவை சேர்ந்த ஆயிஷா மோமின் மூன்றாமிடமும் பிடித்தனர்.அதன்பின் நடந்த, 18 கி.மீ., ஜூனியர் மற்றும் இளம்பெண்கள் பிரிவில், தமிழகத்தை சேர்ந்த தபிதா முதலிடம் பிடித்து தங்க பதக்கம் வென்றார்.கர்நாடகாவை சேர்ந்த தீபிகா எஸ் படடேர் இரண்டாமிடமும், கர்நாடகாவை சேர்ந்த கோகிலா சவான் மூன்றாமிடமும் வென்றனர். பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி