உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சியின் வரலாற்று சிறப்பு கல்லுாரியில் பயிலரங்கம்

காஞ்சியின் வரலாற்று சிறப்பு கல்லுாரியில் பயிலரங்கம்

காஞ்சிபுரம்:தஞ்சாவூர் தமிழ் பல்கலை., கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல் துறை மேற்பார்வையில் இயங்கும், தொல்லியல் கழகம், விழுப்புரம் உமா கல்வி அறக்கட்டளையுடன் இணைந்து, காஞ்சி சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி சார்பில், ஐந்து நாள் கல்வெட்டு பயிலரங்கம் மற்றும் தொல்லியல் கண்காட்சி நடைபெற்று வருகிறது.பயிலரங்கின் இரண்டாம் நாளான்று, காஞ்சியின் வரலாற்று சிறப்புகள் மற்றும் நீர் மேலாண்மை என்ற தலைப்பில் தொல்லியல் துறை முன்னாள் இணை இயக்குனர் ஸ்ரீதரன், அகழ்வாய்வின் நெறிமுறைகள் என்ற தலைப்பில் சதீஷ்குமார் விளக்க உரையாற்றினார்.செப்பேடுகளும், ஓலை சுவடிகளும் என்ற தலைப்பில் கிருஷ்ணமூர்த்தியும், சமணமும் பவுத்தமும் என்ற தலைப்பில் ரமேஷ் ஆகியோர் விளக்கவுரையாற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ