உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கஞ்சா விற்ற வாலிபர்கள் கைது

கஞ்சா விற்ற வாலிபர்கள் கைது

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டம், சிறுவாக்கம் கூட்டு சாலையில், கஞ்சா விற்பனையில் சிலர் ஈடுபடுவதாக, பொன்னேரிக்கரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் போலீசார் அடிக்கடி ரோந்து பணியில் ஈடுபட்டனர்.இந்நிலையில், ரோந்து பணியில் போலீசார் ஈடுபட்டபோது, கூட்டு சாலையில், டூ -- வீலருடன் இருந்த இருவரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.அப்போது, ராணிப்பேட்டை மாவட்டம், புதுகேசாவரம் பகுதியைச் சேர்ந்த கார்மேகவாணன், 25; காஞ்சிபுரம் மாவட்டம், பிச்சிவாக்கத்தைச் சேர்ந்த விஜய், 27, ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். இருவரிடமும், 1,300 கிராம் கஞ்சா மற்றும் பஜாஜ் பல்சர் டூ - வீலரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ